இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும்.

பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மத்திய, சபரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரை ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காலையிலும் கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும்.

அதிகாலை நேரங்களில் மத்திய, சபரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மூடுபனி நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )