
காலி – மாத்தறையிலிருந்து மாகும்புர வருவோருக்கு ஒன்லைன் பஸ் டிக்கெட் பெற்றுக்கொள்ளும் வசதி
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில்ஊகளுக்குச் சென்று, மீண்டும் காலி மற்றும் மாத்தறையிலிருந்து மாகும்புரவிற்கு வருகை தரும் பயணிகள், ஒன்லைன் ஊடாக பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளப் பதிவொன்றின் ஊடாக அமைச்சு குறிப்பிட்டுள்ளதாவது, அதில் வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தமது ஆசனங்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
அவ்வாறு இல்லையெனில், பின்வரும் வழிகளின் ஊடாக பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது,
இணையதளம் -www.busticket.gov.lk
உடனடி தொலைபேசி இலக்கம் – 011 200 1266

