சில பகுதிகளில் பி.ப 1:00 மணிக்குப்பிறகு மழை-சில பகுதிகளில் வறட்சியான வானிலை

சில பகுதிகளில் பி.ப 1:00 மணிக்குப்பிறகு மழை-சில பகுதிகளில் வறட்சியான வானிலை

பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மேற்கு, சபரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின்ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கான சாதகமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )