
மாதூருஓய இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து விழுந்து இராணுவச் சிப்பாய் உயிரிழப்பு
மாதூருஓய இராணுவப் பயிற்சிப் பாடசாலையில் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதூருஓய இராணுவப் பயிற்சிப் பாடசாலையில்
நேற்று (ஏப்ரல் 17) நண்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
பழைய கட்டிடத்தின் சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஜனக்ககம, மாதிவெல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அரலகங்வில பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

