
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
இம்மாதத்தில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அணைக்குழு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் இதுவரை மொத்தம் 88,221 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதில் 25,634 பயணிகளுடன் இந்தியா (29%) முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் இடம்பெற்றுள்ளன.
மேலும், 2026 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 828,845 ஆக உயர்ந்துள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா துறை தொடர்ந்து மீளுருவாக்கம் அடைந்து வருவதற்கான சுட்டுக்காட்டாக இந்த வளர்ச்சி பார்க்கப்படுகின்றது.
CATEGORIES Sri Lanka
TAGS Sri lanka

