
மின்சாரக் கட்டண மாற்றம் ; மே 9ல் இறுதி அறிவிப்பு
திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்த கருத்து சேகரிப்பு நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்ட பின்னர், இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

