
சீரடி சாய்பாபா கோவிலில் விஜய் தரிசனம்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. தேர்தல் பிரசார காலத்தில் மாநிலம் முழுவதும் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
இந்நிலையில், வரும் மே 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், பிரசார பணிகளை நிறைவு செய்த விஜய் தற்போது ஆன்மீக யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.
இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலில் வழிபாடு செய்தார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரம் சென்ற விஜய், அங்கிருந்து கார் மூலம் கோவிலுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES India

