ரஷ்ய சுகாதார அமைச்சர் இன்று இலங்கை வருகை

ரஷ்ய சுகாதார அமைச்சர் இன்று இலங்கை வருகை

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இன்று (03) இலங்கை வரவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் ரஷ்ய அமைச்சர் முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இரு நாடுகளுக்குமிடையிலான சுகாதாரத் துறையில் உள்ள உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் புதிய ஒத்துழைப்புகளை உருவாக்குதல் குறித்து விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தையும் தூதுக்குழுவினர் சந்தித்து, பல்துறை தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளனர்.

ரஷ்ய சுகாதார அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினர், தமது மூன்று நாள் விஜயத்தை நிறைவு செய்து,நாளை மறுதினம் (05) இலங்கையிலிருந்து புறப்படவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )