
விஜய்க்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம் – மெரீனாவில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு
தா வெ க தலைவர் விஜய் ஆட்சியமைப்பதில் ஏற்பட்டு வரும் இழுபறி நிலையையடுத்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் மற்றும் தவெக தொண்டர்கள், விஜய்க்கு ஆதரவாகச் சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு பாணி போராட்டத்தை நடத்தப்போவதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, மெரினா கடற்கரை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் தவெக தலைவர் விஜய்க்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதன் பின்னணியில் விஜய் ஆதரவாளர்களால் போராட்டம் ஏற்பாடு செய்படுவதாக மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை மற்றும் விவேகானந்தர் இல்லம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனிப்பெரும் கட்சிக்கு ஆட்சி அமைக்க முன்னுரிமை வழங்க வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் விவாதங்கள் வலுத்து வரும் நிலையில், மெரினாவில் இளைஞர்கள் கூடாமல் தடுக்கத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

