தவெகவுக்கு சிபிஐ, சிபிஎம் ஆதரவு.!முதல்வர் அரியாசனத்தில் அமருவாரா விஜய்..

தவெகவுக்கு சிபிஐ, சிபிஎம் ஆதரவு.!முதல்வர் அரியாசனத்தில் அமருவாரா விஜய்..

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இதன்மூலம், விஜய்க்கு இன்னும் 2 ஆசனங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெளியாகியிருக்கும் தவெக தனிப் பெரும்பான்மையாக 108 இடங்களில் வெற்றி பெற்றுக்கிறது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆட்சியமைக்க இன்னும் 6 இடங்கள் தேவையாக இருந்த நிலையில் விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவையும் தவெக கோரிவந்தது.

இந்நிலையில் நேற்று தவெக இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் சிபிஐ மற்றும் சிபிஎம் அலுவலகங்களுக்கு நேரில் அக்கட்சியின் மாநில செயலாளர்களை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.

இந்த இரண்டு கட்சிகளும் தங்களது முடிவுகளை இன்று (மே 8) அறிவிப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இருக்கிறது.

இதற்கான கடிதத்தையும் தனது கட்சி அலுவலகத்திற்கு வந்த தவெக இணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாரிடம் வழங்கிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, சிபிஎம் கட்சி தவெகவுக்கு ஆதரவு வழங்குவதாக அக்கட்சி தெரிவித்திருக்கிறது.

இதன்மூலம், தவெகவின் ஆதரவு எண்ணிக்கை 117 ஆக உயர்ந்திருக்கிறது.

ஏற்கனவே, இடதுசாரிகளின் முடிவுகளைப் பொறுத்தே தாங்கள் முடிவுகளை அறிவிக்கவிருப்பதாக விசிக தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சி இன்று பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறது.

இதற்குப் பிறகு, அந்தக் கட்சியின் நிலைபாடு தெரியவரும். விஜய் முதல்வராகவதற்கு 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவே தேவைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இன்று இடதுசாரி கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கின்றனர்.

இது திமுக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது என இந்திய செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )