
இலங்கை – இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பம்
சுற்றுலா மேற்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 (டி20) கிரிக்கெட் தொடர் இன்று (30) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இந்தத் தொடரின் முதலாவது போட்டி இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் இந்த டி20 தொடரில் மொத்தம் மூன்று போட்டிகள் இடம்பெறுகின்றன.
அதன்படி, முதலாவது போட்டி இன்று பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இதில் பங்கேற்கும் இலங்கை அணி நேற்று இரவு பல்லேகல மைதானத்தில் பயிற்சிகளை ஆரம்பித்தது.
வரவிருக்கும் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னர், இலங்கை அணி பங்குபற்றும் கடைசி டி20 தொடர் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sports News

