
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; பலர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோரின் இணைந்த பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 29,744 பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது,
- பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஆதாரங்களுடன் 18 பேர்,
- சந்தேகத்தின் பேரில் 560 பேர்,
- பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 297 பேர்,
- திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 161 பேர்,
- கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 78 சாரதிகள்,
- மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 428 சாரதிகள்,
- ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,473 பேர்
என மொத்தமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
குற்றச் செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இத்தகைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

