
விருஷபா படத்தின் டிரெய்லர் வெளியானது
மோகன்லால் நடித்துள்ள பான் இந்தியன் காவியம் விருஷபா.
இதில் மோகன்லால் உடன் ஷனயா கபூர், ஜாரா கான், ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த் மேகா, ரகினி துவேவிடி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். மேலும் எக்தா ஆர் கபூர் (Balaji Telefilms), Connekkt Media, AVS Studios ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் கிறிஸ்துமஸை ஒட்டி டிசம்பர் 25 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Cinema

