தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – பத்து பேர் வைத்தியசாலையில்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – பத்து பேர் வைத்தியசாலையில்

பெலியத்த மற்றும் கசாகலாவிற்கு இடையே உள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 154வது தூண் அருகே இடம்பெற்ற விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தங்கல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாணந்துறையிலிருந்து கதிர்காமம் நோக்கி மின்சார சபை ஊழியர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ஒரு வேன், முன்னால் சென்று கொண்டிருந்த ஒரு லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் லொறியும் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )