கண்டி – மஹியங்கனை வீதியில் லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கண்டி – மஹியங்கனை வீதியில் லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் , உடதும்பரவின் நிசருவ பகுதியில் இன்று காலை (10)இடம்பெற்றவீதி விபத்தில் இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று , எதிர்திசையில் வந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த இருசக்கர வாகன ஓட்டுநரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர் சுமார் 40 வயதுடைய ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ..

விபத்து தொடர்பாக லொறி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், உடதும்பர காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )