
பலத்த மழைவீழ்ச்சியால் வான்பாயும் 10ற்கும் மேற்பட்ட நீர்த்தேக்கங்கள்
தற்போது நிலவிவரும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக, நீர்ப்பாசன திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 9 பிரதான நீர்த்தேக்கங்களும் 5 நடுத்தர நீர்த்தேக்கங்களும் வான்பாய்வதாக அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
லுணுகம்வெஹெர நீர்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து நீர் விநாடிக்கு 4,000 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
வெஹெரகல நீர் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. விநாடிக்கு 1,400 கன அடிக்கும் அதிகமான நீர் மெனிக் கங்கைக்கு வெளியேற்றப்படுகிறது.
ராஜாங்கனை நீர்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 9,300 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
ததுரு ஓயா நீர்தேக்கத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 5,500 கன அடி நீர் ததுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
அலிகொடஆர நீர்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டு, விநாடிக்கு 500 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்கு வெளியேற்றப்படுகிறது.
நீர் முகமைத்துவப் பொறியியலாளர் எச்.எம்.டி.பி.எஸ்.டி. ஹேரத் இது குறித்துத் தெரிவிக்கையில்,
”நீர்த்தேக்கங்களின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
மழைவீழ்ச்சியின் அளவைப் பொறுத்து வான் கதவுகள் திறக்கப்படும் அளவு எந்த நேரத்திலும் மாற்றமடையலாம்.
வான் கதவுகள் திறப்பு மற்றும் நீர் மட்டம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் குறித்து மக்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியமாகும் ” என

