
மட்டக்களப்பில் அரசாங்க ஒசுசல வலையமைப்பின் 67 வது கிளை திறப்பு
தரமான மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய, சாதாரண விலையில் வழங்கும் நோக்கத்துடன் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) அரச ஒசுசல – மட்டக்களப்பு கிளை இன்று (31) திறந்து வைக்கப்பட்டது.
இது அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அரசாங்க ஒசுசல வலையமைப்பின் 67 வது கிளை என்பதுடன் இலக்கம் 233,237, திருகோணமலை வீதி, மட்டக்களப்பு எனும் இடத்தில் இந்த ஒசுசல ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் எண்ணத்திற்கு ஏற்ப அரசாங்க ஒசுசல ஸ்தாபிக்கும் விசேட திட்டத்தை முன்னிட்டு இந்த புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு ஒசுசல கிளை ஊடாக அனுபவம் மிக்க மருந்தாளர்களின் சேவையின் கீழ், உரிய தரத்துடன் மற்றும் உத்தரவாதத்துடனும் மருந்துகளை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பதுடன், சிரேஷ்ட பிரஜைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், 05 வயதுக்கு குறைந்த குழந்தைகளுக்காக மற்றும் முப்படை வீரர்களின் விருசர அட்டைகளுக்காக 5% விசேட விலை கழிவுடன் மருந்துகள் வழங்கப்படுகின்றமை சிற ப்பம்சமாகும்.
நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி அரசாங்க மருந்தாக்கள் கூட்டுத்தாபனத்தின் தரமான ஆய்வு கூடத்தில் நான்கு சந்தர்ப்பங்களில் பரீட்சித்துப் பார்த்ததன் பின்னர் மருந்துகள் சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும், பொது மக்கள் நம்பிக்கையுடன் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை மக்களுக்கு உயர்தரத்திலான நிரூபிக்கப்பட்ட மருந்துகளை நியாயமான விலையில் வழங்குவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு, பேராசிரியர் சேனக பிபிலே அவர்களால் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், 54 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டு மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்கி வருகிறது.
இந்நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். தனன்ஜயன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் உட்பட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள், மற்றும் அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மனூஜ் சி. வீரசிங்க, முகாமைத்துவ பணிப்பாளர் மெவன் சம்பத் சுபசிங்க ஆரச்சி, உட்பட அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் ட்டக்களப்பு வர்த்தகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

