பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு கடும் சிறைத் தண்டனை

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்களுக்கு கடும் சிறைத் தண்டனை

பாகிஸ்தானில் 2023-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை அடித்து, பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நீதிமன்ற விசாரணையில், இம்ரான்கானின் கட்சியினரான 47 முக்கிய தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒவ்வொருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அவர்களுடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை கட்சி ஆதரவாளர்கள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கண்டித்து வன்மையாக எதிர்த்துள்ளனர்.

ஏற்கனவே இம்ரான் கான் ஊழல் வழக்குகளில் சிறையில் இருப்பதால், இந்த தீர்ப்பு பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )