கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பில் வெளியான தகவல்

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபர், இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்புக்காக ஆஜர்படுத்தப்பட்டார்.

குறித்த அடையாள அணிவகுப்பில் அடையாளம் காண இரண்டு சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்ட போது சந்தேக நபரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதாள உலக கும்பலின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த (19.02.2025) கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )