
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய திட்டம் இல்லை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய திட்டம் இல்லை என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) அவர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ”கால மாற்றத்துக்கு ஏற்ப கல்வித்துறையில் பல மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
புலமைப்பரிசில் பரீட்சையை தற்போது ரத்து செய்வதற்குத் தீர்மானம் எடுக்கவில்லை என்பதுடன், புதிய மறுசீரமைப்புடன் இணைந்ததாக அதனைச் செயற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.
எனினும், தற்போது புலமைப்பரிசில் தொடர்பான அழுத்தத்தைக் குறைக்க சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
2028 அல்லது 2029 ஆம் ஆண்டுக்குள் அதனைச் செயல்படுத்த முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.” என தெரிவித்துள்ளார்.

