
சீரற்ற காலநிலையால் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலையப் பாடசாலைகளுக்கு நாளை (15) விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணக் கல்வி பணிப்பாளரின் அறிவுறுத்தல்களின் பேரில் ஹட்டன் கல்வி வலையம் இந்த முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, ஹட்டன் கல்வி வலையப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறையாக அறிவிக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்களும் மாணவர்களும் நாளை ஏனைய தேவைகளுக்காகப் பாடசாலைகளுக்கு வருவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

