கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய அதி கூடிய மழைவீழ்ச்சி

கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகிய அதி கூடிய மழைவீழ்ச்சி

இன்று (15) காலை 5.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சி அவிசாவளையில் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் இடர் மேலாண்மை) எல். எஸ். சூரியபண்டார இது பற்றி கூறும்போது ,

அவிசாவளை – 180 மி.மீ
துனாமல (அத்தனகலு ஓயா) – 176 மி.மீ
கிரியுல்ல – 172 மி.மீ
ஹங்வெல்ல -158 மி.மீ
தெஹியோவிட்ட – 122 மி.மீ

நேற்று இரவு முதல் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகின்ற போதிலும், இதுவரை எச்சரிக்கை மட்டத்தை எட்டவில்லை.

கிரியுல்ல பகுதியில் பெய்த கனமழையால் மகா ஓயாவின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனினும், கிரியுல்ல மற்றும் பாதல்வெல பகுதிகளில் இதுவரை வெள்ள அபாய மட்டம் எட்டப்படவில்லை.

கிங் கங்கை, நில்வலா கங்கை மற்றும் களு கங்கை படுகைகளிலும் 50 மி.மீ முதல் 100 மி.மீ வரையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், அவற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

நாட்டின் ஈரவலயப் பகுதிகளில் குறிப்பாக கனமழை தொடரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் ஆற்றோரங்களிலும் தாழ்நிலப்பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், உத்தியோகபூர்வ வானிலை மற்றும் அனர்த்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )