சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களில் 88 வீடுகள் பகுதியளவு சேதம்

சீரற்ற வானிலையால் 7 மாவட்டங்களில் 88 வீடுகள் பகுதியளவு சேதம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 88 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதன்படி பாதிக்கப்பட்ட வீடுகள் ஏழு மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் 40 வீடுகள் பகுதியளவு சேதமாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 வீடுகளும், இரத்தினபுர மாவட்டத்தில் ஒன்பது வீடுகளும், காலி மாவட்டத்தில் ஐந்து வீடுகளும், கொழும்பு மாவட்டத்தில் ஐந்து வீடுகளும், மொனராகலை மாவட்டத்தில் நான்கு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

நிலவும் மோசமான வானிலை காரணமாக 29 குடும்பங்களைச் சேர்ந்த 104 நபர்கள் தற்போது இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )