
ரஷ்ய தூதுவருக்கும் நிதி பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட சந்திப்பு
தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கும், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகரியன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, சமீபத்தில் (மே 14) நிதி அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதாகத் தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு நல்ல அடித்தளமாக அமையும் என்றும் ரஷ்யத் தூதுவர் மேலும் வலியுறுத்தினார்
நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

