
தேசிய மக்கள் சக்தி எம்.பி பயணித்த வாகனம் விபத்து ; இருவர் காயம்
தேசிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.கே. ஜயசுந்தர பயணித்த கெப் ரக வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று (17) பிற்பகல் ஹினிதும ஹபரகடை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி மற்றும் 8 வயது சிறுவன் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் வாகன சாரதியை ஹினிதும பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

