
பைப் குழாய்க்குள் 2 கோடி பெறுமதியான ஹெராயின் கொண்டு சென்ற ஒருவர் கைது
பைப் குழாய்க்குள் மறைத்து வைத்திருந்த ஹெராயின் தொகையை கொண்டு சென்ற ஒருவரை களுத்துறை போலீஸ் சிறப்புப் பணியக அதிகாரிகள் பயாகல பகுதியில் கைது செய்தனர்.
குடா பயாகல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பைப்பை ஆய்வு செய்தபோது 1 கிலோ 175 கிராம் ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்த பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் வழியாக படகுகள் மூலம் கொண்டு வரப்பட்ட போதைப்பொருட்கள் மொத்தமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக சந்தேக நபரின் வாக்குமூலங்களில் வெளிப்படுத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
CATEGORIES Sri Lanka

