
கல்கிஸ்சையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கல்கிஸ்சை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுத்தாகொடை வீதி பகுதியில் நேற்று (16) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின் போது, சந்தேகநபரிடமிருந்து 925 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

