சேனவல்லி ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

சேனவல்லி ஏரியில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

தம்பலகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனவல்லி ஏரியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மயக்கமடைந்து நீரில் விழுந்து மூழ்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தம்பலகமுவ அர்பநகரைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )