நட்புறவுப் பாலங்களை அமைக்கும் இந்திய கடற்படையின் முயற்சிகொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த சுனைனா போர்க்கப்பல்

நட்புறவுப் பாலங்களை அமைக்கும் இந்திய கடற்படையின் முயற்சிகொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த சுனைனா போர்க்கப்பல்

இந்திய கடற்படையின் நட்புறவுப் பாலங்களை (Bridges of Friendship) கட்டியெழுப்பும் முயற்சியை வெளிப்படுத்தும் வகையில், இந்திய கடற்படைக் கப்பலான சுனைனா (INS Sunayna), IOS சாகர் (IOS Sagar) பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்பு வந்தடைந்த கப்பலுக்கு கடற்படையினரால் பாரம்பரிய கடற்படை முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கமாண்டர் சித்தார்த் சௌத்ரியின் (Commander Siddharth Chaudhary) தலைமையில் இயங்கும் இக்கப்பலில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மாலுமிகளைக் கொண்ட பல்தேசியக் குழுவினர் பயணித்து வருகின்றனர்.

இந்த கூட்டுப் பயணத்தில் இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேசியா, கென்யா, மலேசியா, மாலைத்தீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், மியான்மர், சிங்கப்பூர், சீஷெல்ஸ், தென்னாப்பிரிக்கா, தான்சானியா, தாய்லாந்து, திமோர்-லெஸ்தே மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் இணைந்துள்ளனர்.

இக்கப்பல் தனது கடல்சார் பயணத்தை கடந்த ஏப்ரல் 02ஆம் திகதி மும்பை துறைமுகத்திலிருந்து ஆரம்பித்திருந்தது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்த பல்தேசியக் குழுவினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து தொடர்ச்சியான தொழில்முறை கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டுப் பயிற்சித் திட்டங்களில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

அத்துடன், வருகை தந்துள்ள கடற்படை வீரர்கள் நாட்டின் பல முக்கிய வரலாற்று மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று, இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அறிந்துகொள்வதற்கான உல்லாசப் பயணங்களிலும் ஈடுபடவுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )