
நியூயோர்கில் ஹய்டி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஹய்டி பிரதமர் Hon. Alix Didier Fils-Aime மற்றும் வெளிவிவகார அமைச்சர் Ms. Raina Forbin ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் ஹய்டிக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தபட்டது.
குறிப்பாக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர நலன்களையுடைய துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இரு தரப்பும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலைகள் குறித்து கருத்து பரிமாறிக்கொண்டதுடன், தூதரக மற்றும் பாதுகாப்பு துறைகள் மூலம் நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் உறுதிப்பாட்டையும் வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.



