
WhatsApp-க்கு நேரடி போட்டியாக XChat-ஐ களமிறக்கிய எலான் மஸ்க் !
டிஜிட்டல் தொடர்பாடல் துறையில் புதிய போட்டியை உருவாக்கும் வகையில் “XChat” எனும் புதிய மெசேஜிங் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செயலி உலகளவில் பரவலாக பயன்படுத்தப்படும் WhatsApp செயலிக்கு போட்டியாக அறிமுகமாகியுள்ளது.
இந்த செயலி உடனடி செய்தி பரிமாற்றம், குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பயனாளர்களை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
WhatsApp போன்ற முன்னணி செயலிகளுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள “XChat” செயலியில்,
தொலைபேசி எண்ணை பயன்படுத்தாமல், X கணக்குகள் மூலம் உள்நுழைய (login) செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பயனாளர்கள் தனியுரிமை மற்றும் எளிதான அணுகல் ஆகியவற்றை ஒரே நேரத்தில் பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
புதிய அம்சங்களுடன் களமிறங்கியுள்ள “XChat”,
உலகளாவிய மெசேஜிங் செயலிகள் சந்தையில் WhatsApp-க்கு வலுவான போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது

