பத்தேகமயில் கள்ளச்சாராய முற்றுகையின் போது பொலிஸாரைக் கொன்றவருக்கு 18 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை

பத்தேகமயில் கள்ளச்சாராய முற்றுகையின் போது பொலிஸாரைக் கொன்றவருக்கு 18 ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை

கடந்த 2008ஆம் ஆண்டு கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவருக்கு பலாபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2008 நவம்பர் 30 திகதி ஹாமிகல பகுதியில் உள்ள கள்ளச்சாராய உற்பத்தி நிலையத்தை முற்றிகையிட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பத்தேகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கே.எச். திலீப குமாரசிங்க என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் இந்த சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

வழக்கின் நான்காவது குற்றவாளியான எம்.கே. பிரசாத் மனோரஞ்சன என்கிற களுத்துறை சுட்டே என்பவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை பலாபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ருசிர வெலிவத்த அறிவித்தார்.

நான்காவது குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

வழக்கின் முதலாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக கூறப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இரண்டாவதுகுற்றவாளியாக கூறப்பட்டவர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரச சட்டத்தரணி செனூரி குணதிலக்க ஆஜராகியிருந்தார். நீண்ட கால நீதித்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )