குவைத் எல்லை மீது ட்ரோன் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்

குவைத் எல்லை மீது ட்ரோன் தாக்குதல் : கட்டார் கடும் கண்டனம்

குவைத் எல்லைப் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளது.

ஈராக் நாட்டிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மூலம் இரண்டு குவைத் எல்லைப் பாதுகாப்பு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலை “மிகக் கடுமையான முறையில்” கண்டிப்பதாக கட்டார் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, குவைத்தின் இறையாண்மைக்கு எதிரான வெளிப்படையான மீறலும்,பிராந்திய பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலுமாகும் என கட்டார் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க,
ஈராக் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கட்டார் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை, குவைத்துடன் முழுமையான ஒற்றுமையையும்,
அதன் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை காக்க எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்குவதாகவும் கட்டார் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )