
சவுதி – கத்தார் – அமீரகம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று ஈரானில் தற்போதைக்கு தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம் – டிரம்ப்
சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகள் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டு, ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து டிரம்ப், அமெரிக்க இராணுவத் தளபதிகளைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னரே தாக்குதல் நடத்த வேண்டாம் என்ற முடிவை அவர் எடுத்துள்ளார்.
சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து, ஈரானுக்கு எதிராக அவசரப்பட்டு இராணுவ நடவடிக்கைகளை எடுக்கப் போவதில்லை என்றும், எனினும் ஈரான் தனது அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் தெளிவான உடன்பாட்டுக்கு வராவிட்டால், ஈரான் மீது தொடர்ந்து கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

