
கால்வாயில் நீராடச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம், உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெமடமல்பலஸ்ஸ பகுதியில் உள்ள கால்வாயில் நீராடச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (20) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உஹன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் உஹன பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் உஹன பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

