சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை கடத்த முயன்ற ​​பெண்ணை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்டவர் ஒருவகடவத்தை சூரியபலுவ பகுதியில் வசிக்கும் 27 வயதுடையவர் என்றும் இவர் ஒரு அழகுக்கலை நிபுணர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் எடுத்துச் சென்ற பொருட்களில் 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் இருந்தன. அவரிடம் இருந்த 50 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பெண் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )