
மரத்தில் மோதி பேருந்து விபத்து ; 21 பேர் காயம்
நிக்கவெரட்டிய பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, ஆராச்சிகட்டுவ, பத்துலுஓய பகுதியில் வீதியை விட்டு விலகி, மரமொன்றில் மோதி, பின்னர் கடை மற்றும் வீட்டொன்றின் மீது மோதி இன்று (17) காலை விபத்துள்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் வீட்டில் இருந்த சிறு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் ஹலவத்தா மற்றும் முந்தலா மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்து தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



CATEGORIES Sri Lanka