சிகிரியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழப்பு

சிகிரியாவில் சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழப்பு

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கு  முறையான முதலுதவி வசதிகள் இல்லாதமையே காரணம் என சுற்றுலா சங்கமொன்றின் செயலாளர் தெரிவித்தார்.

சிகிரியாவில் முறையான முதலுதவி வசதிகள் இல்லாமை காரணத்தினால் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் உட்பட மொத்தம் 06 பேர் உயிரிழந்துள்ளதாக ற்றுலா சங்கமொன்றின் செயலாளர் .பி. விஜேசிங்க தெரிவித்தார்.

சிகிரியாவை பார்வையிடுவதற்கான பயணச்சீட்டு 11,000 ரூபாய் ஆகும். ஆனால் அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முறையான முதலுதவி வசதிகள் எதுவும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத் தலங்களில் முறையான முதலுதவி வசதிகளை வழங்குவது தொடர்பில் சுற்றுலாத் துறைசார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )