
கோட்டாபய வழங்கிய உத்தரவு சட்டவிரோதமானது
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண்ணை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்கிய அனுமதி முற்றிலும் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் இன்று (18) தீர்ப்பளித்துள்ளது.
இந்த அடிப்படை மனித உரிமை மீறலுக்காக அரசாங்கம் மனுதாரருக்கு 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka