இறப்பர் பால் ஏற்றி சென்ற கொள்கலன் விபத்து ; 2 பேர் பலி

இறப்பர் பால் ஏற்றி சென்ற கொள்கலன் விபத்து ; 2 பேர் பலி

கலவானையில் இருந்து பதுரலிய நோக்கிச் சென்ற இறப்பர் பால் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்திற்கு அருகில் பதுரலிய – கலவான சாலையில் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்தனர்.

இவ்விபத்து நேற்று (26) நள்ளிரவு 12.00 மணியளவில் இடம்பெற்றதோடு, காயமடைந்த மற்றொரு நபர் கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் புலத்சிங்கள பகுதியில் உள்ள ஒரு இறப்பர் தொழிற்சாலையின் ஊழியர்கள் என்றும், அவர்கள் புலத்சிங்கள மற்றும் ரம்புக்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் கொள்கலன் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கலவானை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த விபத்து குறித்து கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )