கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி காலவரையறையின்றி மீண்டும் மூடப்பட்டது

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகன்னாவ பகுதி காலவரையறையின்றி மீண்டும் மூடப்பட்டது

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதி, நேற்றிரவு இரவு 10 மணி முதல் காலவரையறையின்றி மீண்டும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முன்னர் மூடப்பட்டிருந்த கணேதென்ன பகுதியிலிருந்து மீண்டும் பாதை மூடப்படும் எனவும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடுகன்னாவை கீழ் கணேதென்ன பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் ஒரு வழிப்பாதையாக திறக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.இந்நிலையில் மீண்டும் மூடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )