மலையகப் பாதையின் அனைத்து ரயில்களும் கொழும்பு கோட்டை மற்றும் நானுஓயா வரை மட்டுமே இயக்கப்படும்

மலையகப் பாதையின் அனைத்து ரயில்களும் கொழும்பு கோட்டை மற்றும் நானுஓயா வரை மட்டுமே இயக்கப்படும்

தற்போது நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்தில் கொண்டு, மலையகப் பாதையின் அனைத்து ரயில்களையும் கொழும்பு கோட்டை-நானுஓயா மற்றும் நானுஓயா-கொழும்பு கோட்டை இடையே மட்டுமே இயக்க ரயில்வே திணைக்களம் முடிவு செய்துள்ளது.

அதன்படி,இன்று காலை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு புறப்படவிருந்த ரயில்களான , பொடி மெனிகே (காலை 5.55), உடரட்ட மெனிகே (காலை 8.30) மற்றும் காலை 9.45ற்கு இயக்கப்படும் ரயிலும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் கண்டியிலிருந்து பதுளைக்கு பயணிக்கும் கண்டி ஒடிஸி (காலை 9.40) ரயில் நானுஓயா வரை மட்டுமே இயக்கப்படும்.

நானுஓயாவிலிருந்து புறப்படும் ரயில்கள் :
உடரட்ட மெனிகே (காலை 9.20), கண்டி ஒடிசி (காலை 11.00), பொடி மெனிகே (பிற்பகல் 12.15) மற்றும் பிற்பகல் 2.16ற்கு இயக்கப்படும் ரயில் ஆகியன நானுஓயாவிலிருந்து தனது பயணத்தை ஆரம்பிக்கும்.

சீரற்ற வானிலை குறைவடையும் வரை ரயில் சேவைகள் இவ்வாறு மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )