கணேமுல்லா பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

கணேமுல்லா பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

கணேமுல்லா பகுதியில் ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ எனப்படும் போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த நிலையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, கொனஹேன காவல் சிறப்பு அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை ஆய்வு செய்ததில் குறித்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 470 கிராம் ‘ஐஸ்’ மற்றும் 230 கிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும், பொல்லத்தா மற்றும் கணேமுல்லா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கணேமுல்லாபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )