
மின்சாரக் கட்டண திருத்தம் இன்று வெளியீடு
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (30) அறிவிக்கப்பட உள்ளது.
இதனை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் குறித்த கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரக் கட்டண மாற்றம் தொடர்பான இந்த அறிவிப்பு, நாட்டின் தற்போதைய ஆற்றல் மற்றும் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

