
இந்தியா–இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் விசேட கலந்துரையாடல்
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் மற்றும் அதற்கான நிலைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ‘எக்ஸ்’ (X) கணக்கில் பதிவொன்றை பகிர்ந்துகொண்டு, தற்போதைய நிலைமை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் கோட்பாடுகளை இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு தெளிவுபடுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமான ஒன்றாக அமைந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

