தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் ஓட்டிச் சென்ற கார் சுவரில் மோதி விபத்து

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் ஓட்டிச் சென்ற கார் சுவரில் மோதி விபத்து

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் அவர்கள் ஓட்டிச் சென்ற கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் காரின் முன்பகுதிக்கும், மோதிய சுவருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே காரில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )