
சர்வதேச சந்தையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் குறிப்பிடத்தக்க உயர்வு பதிவாகியுள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,511.85 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 70.33 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இந்த விலை உயர்வின் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் எதிரொலிக்கக்கூடும் என பொருளாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால், உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களைப் பொருத்து, எதிர்கால நாட்களில் விலைகளில் மேலும் ஏற்றத்தாழ்வுகள் நிகழக்கூடும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

