வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

வயலில் வேலை செய்துகொண்டிருந்த வயோதிபர் மின்னல் தாக்கி உயிரிழப்பு!

பொலன்னறுவை – அரலகங்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெகுலுவெல பிரதேசத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் மின்னல் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

அரலகங்வில,கெகுலுவெல பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் மற்றுமொரு நபருடன் இணைந்து வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )