வடக்கு – கிழக்கு தழுவிய மாபெரும் கவனயீர்ப்பு

வடக்கு – கிழக்கு தழுவிய மாபெரும் கவனயீர்ப்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வடக்கு – கிழக்கு தழுவிய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதிகோரியும், போர்க்குற்றம், மனித புதைகுழிகள் உள்ளிட்டவற்றிற்கான சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில், தமது உறவுகளை தொலைத்து பல வருடங்களாக தேடிக் கொண்டிருக்கும், நீதிகேட்டுக் கொண்டிருக்கும் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )