Grok AI ChatBot-க்கு இந்தோனேசியாவில் தற்காலிகத் தடை

Grok AI ChatBot-க்கு இந்தோனேசியாவில் தற்காலிகத் தடை

எலோன் மஸ்க்கின் Grok AI ChatBot செயலிக்கு இந்தோனேசியாவில் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் மூலம் ஆபாசமான மற்றும் தவறான (Deepfake) புகைப்படங்கள் உருவாக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Grok AI மூலம் பெண்களின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாகச் சித்திரிக்க முடியும் என்ற புகார்கள் சமீபகாலமாக உலகளவில் அதிகரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக இந்தோனேசியாவின் தகவல் மற்றும் டிஜிட்டல் விவகாரங்கள் துறை அமைச்சர் மியுத்யா ஹபீத் (Meutya Hafid),
“இவ்வகையான செயல்கள் மனித உரிமை மீறலாகவும், டிஜிட்டல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன” எனக் குறிப்பிட்டு, Grok AI-க்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

Grok AI செயலியை முழுமையாகத் தடை செய்த முதல் நாடாக இந்தோனேசியா மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )